/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வேன் மீது அரசு பஸ் மோதல் 2 பெண்கள் உட்பட 5 பேர் காயம்
/
வேன் மீது அரசு பஸ் மோதல் 2 பெண்கள் உட்பட 5 பேர் காயம்
வேன் மீது அரசு பஸ் மோதல் 2 பெண்கள் உட்பட 5 பேர் காயம்
வேன் மீது அரசு பஸ் மோதல் 2 பெண்கள் உட்பட 5 பேர் காயம்
ADDED : மார் 04, 2025 09:00 PM
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே வேன் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 5 பேர் காயமடைந்தனர்.
கண்டரக்கோட்டையைச் சேர்ந்த 22 பேர் நேற்று மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழாவில் பங்கேற்க வேனில் சென்றனர். வேனை அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த், 30; என்பவர் ஓட்டினார். முண்டியம்பாக்கத்தில் இருந்து ஒரத்துார் வழியாக லட்சுமிபுரம் சென்று செஞ்சி சாலையை கடக்க முயன்றபோது, தனியார் கல்லுாரி அருகே செஞ்சியில் இருந்து விழுப்புரம் நோக்கிச் சென்ற அரசு பஸ் வேன் மீது மோதியது.
இதில், வேனில் சென்ற வெண்ணிலா, 43; குப்பம்மாள், 58; விஜயகுமார், 38; அஜித்குமார், 28; ராமச்சந்திரன், 48; ஆகிய 5 பேர் காயமடைந்தனர். உடன் அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
விக்கிரவாண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.