/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வாலிபரை கத்தியால் வெட்டிய வழக்கில் 6 பேர் கைது
/
வாலிபரை கத்தியால் வெட்டிய வழக்கில் 6 பேர் கைது
ADDED : ஆக 14, 2024 05:54 AM

திண்டிவனம் : திண்டிவனத்தில் வாலிபரை கத்தியால் வெட்டிய வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம், கிடங்கல் (1) பூதேரி, பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த வீராசாமி மகன் சந்தோஷ், 18; இவர், நேற்று முன்தினம் மாலை 5:30 மணியளவில், பைக்கில் கிடங்கல் பகுதியில் உள்ள பாலம் அருகே வந்த போது, அதே பகுதியைச் சேர்ந்த தி.மு.க.,பிரமுகர் ரெமோ அபி, 30; என்பவருடன் தகராறு ஏற்பட்டது.
இதில், ஆத்திரமடைந்த ரெமோ அபி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கத்தியால் வெட்டியதில் சந்தோஷ் படுகாயமடைந்தார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின் பேரில், ரெமோ அபி, ரெஜினாத், 20; சுந்தர், 30; ரிஸ்வான், 20; ஷாஜகான், 20; சானஉல்லா, 18; ஆகிய 6 பேர் மீது திண்டிவனம் டவுன் போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிந்து கைது செய்தனர்.