/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விவசாயியிடம் ரூ.73.50 லட்சம் மோசடி விழுப்புரத்தில் தொடரும் சைபர் கிரைம்

ADDED : மே 12, 2024 04:39 AM
விழுப்புரம்: ஆன்லைனில் டிரேடிங் தொழில் முதலீடு பெயரில் விவசாயியிடம் ரூ. 73.50 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம், வண்டிமேட்டை சேர்ந்தவர் ராமமூர்த்தி,71; விவசாயி. இவரை கடந்த மார்ச் மாதம் மொபைல் போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், ஆன்லைனில் டிரேடிங்கில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றார். மேலும், வாட்ஸ் ஆப்பில் ஒரு லிங்கை அனுப்பி, அதில் உள்ள ஆப்பில் இருக்கும் ஸ்டாக்குகளை வாங்க கூறினார்.
அதனை நம்பி ராமமூர்த்தி தனது வங்கி கணக்கில் இருந்து மர்ம நபர் கூறிய வங்கி கணக்கில் இருந்து கடந்த ஏப்ரல் 16ம் தேதி முதல் கடந்த 6ம் தேதிவரை ரூ.73 லட்சத்து 50 ஆயிரம் அனுப்பினார். அதன்பிறகு மர்ம நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ராமமூர்த்தி நேற்று அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபரை தேடிவருகின்றனர்.