/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குட்கா விற்பனை 8 கடைகளுக்கு 'சீல்'
/
குட்கா விற்பனை 8 கடைகளுக்கு 'சீல்'
ADDED : மே 21, 2024 04:49 AM

திண்டிவனம்: திண்டிவனத்தில் குட்கா பொருட்கள் விற்பனை செய்த 8 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.
திண்டிவனம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் குட்கா பொருட்கள் விற்பதாக எஸ்.பி.,க்கு புகார் சென்றது. அதனைத் தொடர்ந்து, மாவட்ட நியமன அலுவலர் சுகந்தன் உத்தரவின் பேரில், திண்டிவனம் உணவு பாதுகாப்பு அலுவலர் கொளஞ்சி, போலீஸ் பாதுகாப்புடன் நேற்று திண்டிவனம் பகுதியில் உள்ள பங்க் கடைகளில் அதிரடி சோதனை நடத்தினார்.
அதில், திண்டிவனம் புதுமசூதி தெரு, சேடன்குட்டை, முருங்கப்பாக்கம், அய்யந்தோப்பு, மருத்துவமனை சாலைகளில் உள்ள கடைகளில் அதிரடியாக சோதனை நடத்தி, விற்பனைக்கு வைத்திருந்த 2 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, குட்கா விற்பனை செய்த 8 கடைகளுக்கு 'சீல்' வைத்து, தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

