/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரூ.85.38 லட்சம் கையாடல் வங்கி உதவி மேலாளர் கைது
/
ரூ.85.38 லட்சம் கையாடல் வங்கி உதவி மேலாளர் கைது
ADDED : மே 03, 2024 02:29 AM
விழுப்புரம்:தேசியமயமாக்கப்பட்ட வங்கியில், 85 லட்ச ரூபாயை கையாடல் செய்த உதவி மேலாளர் கைது செய்யப்பட்டார்.
ஆந்திரா மாநிலம், கொலமூடி, எருக்குலபாலம் பகுதியைச் சேர்ந்தவர் ரகு, 33. விழுப்புரத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். வாடிக்கையாளர்களின் சேமிப்பு மற்றும் நடப்பு கணக்கு பரிவர்த்தனைகளை கவனித்து வந்த இவர், ஏ.டி.எம்.,மில் பணம் நிரப்பும் பணியையும் செய்து வந்தார். ஆனால், ஏ.டி.எம்.,மில் பணத்தை சரியாக நிரப்பாமல் ஒவ்வொரு முறையும், சிறிது, சிறிதாக கையாடல் செய்து வங்கி நிர்வாகத்திற்கு தவறான தகவல்களை அளித்து வந்ததாக கூறப்படுகிறது.
சில தினங்களுக்கு முன் உயர் அதிகாரிகள் தணிக்கை செய்தபோது, 85.38 லட்சம் ரூபாயை ரகு கையாடல் செய்தது தெரிந்தது. விசாரணையில், பணத்தை கையாடல் செய்ததை ரகு ஒப்புக்கொண்டார்.
இதுகுறித்து வங்கி கிளை மேலாளர் ஜெயபாலாஜி அளித்த புகாரின் படி, விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, சென்னை, ஆவடியில் இருந்த ரகுவை நேற்று கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.