/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இ.எஸ்., கல்லுாரியில் 8ம் ஆண்டு விழா
/
இ.எஸ்., கல்லுாரியில் 8ம் ஆண்டு விழா
ADDED : ஏப் 30, 2024 11:26 PM

விழுப்புரம் : விழுப்புரம் இ.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 8ம் ஆண்டு விழா நடந்தது.
முதல்வர் முரளிதரன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் வேல்முருகன் வரவேற்றார். புதுச்சேரி பல்கலைக்கழகம், சுப்ரமணிய பாரதி தமிழ்மொழி மற்றும் இலக்கிய பள்ளி துறை தலைவர் கருணாநிதி சிறப்புரையாற்றினார்.
விழாவில், துறை வாரியாக முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், போட்டிகளில் வென்ற மாணவர்கள், 100 சதவீதம் விடுப்பு எடுக்காமல் கல்லுாரிக்கு வந்த மாணவர்களுக்கு சான்றிதழ், நினைவு பரிசு வழங்கப்பட்டது.
பல்கலைக்கழக தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி வழங்கிய பேராசிரியர்களை பாராட்டி, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. கணினி அறிவியல் துறை தலைவர் சிவசங்கரி நன்றி கூறினார்.