/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பத்தாம் வகுப்பு தேர்வில் 94.11 சதவீதம் தேர்ச்சி: விழுப்புரம் மாவட்டம் 'டாப் 10'ல் இடம் பிடித்தது
/
பத்தாம் வகுப்பு தேர்வில் 94.11 சதவீதம் தேர்ச்சி: விழுப்புரம் மாவட்டம் 'டாப் 10'ல் இடம் பிடித்தது
பத்தாம் வகுப்பு தேர்வில் 94.11 சதவீதம் தேர்ச்சி: விழுப்புரம் மாவட்டம் 'டாப் 10'ல் இடம் பிடித்தது
பத்தாம் வகுப்பு தேர்வில் 94.11 சதவீதம் தேர்ச்சி: விழுப்புரம் மாவட்டம் 'டாப் 10'ல் இடம் பிடித்தது
ADDED : மே 10, 2024 09:54 PM

விழுப்புரம்: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் விழுப்புரம் மாவட்டம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 3.54 தேர்ச்சி சதவீதம் அதிகம் பெற்று தமிழகத்தில் 10ம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.
தமிழகத்தில் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. விழுப்புரம் மாவட்டத்தில், தேர்வு முடிவுகளை கலெக்டர் பழனி வெளியிட்டார்.
மாவட்டத்தில், 240 அரசு பள்ளிகள் உட்பட 364 பள்ளிகளில் இருந்து 12 ஆயிரத்து 414 மாணவர்கள், 11 ஆயிரத்து 679 மாணவிகள் என மொத்தம் 24 ஆயிரத்து 93 பேர் பொதுத் தேர்வு எழுதினர்.
அதில், 11 ஆயிரத்து 456 மாணவர்கள், 11 ஆயிரத்து 217 மாணவிகள் என மொத்தம் 22 ஆயிரத்து 673 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 92.28 சதவீதம், மாணவிகள் 96.04 சதவீதம் என மொத்தம் 94.11 சதவீதம் தேர்ச்சி பெற்று, மாநிலத்தில் 10ம் இடத்தை பிடித்து முன்னேறியுள்ளது.
கடந்த கல்வியாண்டில் மாநில அளவில் 24வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், அரசு பள்ளிகள் அளவிலும் 93.51 சதவீதம் பெற்று, கடந்த ஆண்டு 18வது இடத்திலிருந்து 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 151 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
கலெக்டர் கூறுகையில், 'பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் இந்தாண்டு 94.11 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் எனது வாழ்த்துக்கள்.
இதற்கு உறுதுணையாக இருந்த முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டுக்கள், தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, உடனடி சிறப்பு தேர்வை எதிர்கொள்ள சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்படும்.
மாணவர்கள், மனம் தளராமல் நன்கு படித்து, சிறப்பு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதற்கு பெற்றோர், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்' என்றார்.
சி.இ.ஓ., அறிவழகன், டி.இ.ஓ.,க்கள் சிவசுப்ரமணியன், மகாலட்சுமி, சுப்புராயன், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் பெருமாள், செந்தில்குமார் உடனிருந்தனர்.