/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
2 கிலோ நகை அணிந்து வந்த கர்நாடக தொழிலதிபர்
/
2 கிலோ நகை அணிந்து வந்த கர்நாடக தொழிலதிபர்
ADDED : ஏப் 27, 2024 01:45 AM

விழுப்புரம்:கர்நாடகா மாநிலம், ஷிவமொகா பகுதியைச் சேர்ந்தவர் ரெஜிமோன், 53, தொழிலதிபர். இவர், வைக்கோல் தீவனம் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தின் நிர்வாகியாக உள்ளார். இவர், கடந்த மார்ச் 25ம் தேதி, வேலை நிமித்தமாக காரில் புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் நோக்கி வந்தார்.
அப்போது, கண்டமங்கலம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி, 68,000 ரூபாயை எடுத்துச்சென்றதால், பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்த தொகையை திரும்பப் பெறுவதற்காக, நேற்று காலை விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்துக்கு, ரெஜிமோன் மற்றும் அவரது நிறுவன ஊழியர்கள் சிலர் வந்தனர். அப்போது, ரெஜிமோன், தன் இரண்டு கைகள் மற்றும் கழுத்தில் ஏராளமான தங்க நகைகளை அணிந்து வந்தார்.
அவர் கூறும்போது, ''நான் எப்போதுமே இந்த நகைகளை அணிந்திருப்பேன். 2.25 கிலோ எடை நகையை போட்டுள்ளேன். இது எனது பேஷன்,'' என்றார்.

