/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வேட்பு மனு தாக்கலின்போது காலில் விழுந்த வேட்பாளர்
/
வேட்பு மனு தாக்கலின்போது காலில் விழுந்த வேட்பாளர்
ADDED : மார் 27, 2024 07:35 AM

விழுப்புரம் : விழுப்புரம் லோக்சபா தொகுதி பா.ம.க., வேட்பாளர் மனு தாக்கல் செய்யும் போது பா.ஜ., பிரமுகர்கள் காலில் விழுந்து ஆசி பெற்றார்.
பா.ஜ., கூட்டணியில் விழுப்புரம் லோக்சபா (தனி) தொகுதியில் பா.ம.க., வேட்பாளர் முரளிசங்கர் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்ய மாவட்ட தேர்தல் அலுவலர் அறைக்கு வந்தார். அப்போது, மனு தாக்கல் செய்வதற்கு முன், வேட்பாளர் முரளிசங்கர், உடன் வந்த பா.ஜ., மாநில துணைத் தலைவர் சம்பத், மாவட்ட தலைவர் கலிவரதன் ஆகியோரது காலில் விழுந்து ஆசி பெற்றார். மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி முன்னால், வேட்பாளர் பா.ஜ., பிரமுகர்கள் காலில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

