/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் பைபாஸில் தீப்பிடித்து எரிந்த கார்
/
விழுப்புரம் பைபாஸில் தீப்பிடித்து எரிந்த கார்
ADDED : செப் 05, 2024 05:10 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் ஓடும் கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது.
கடலுார் மாவட்டம், விருத்தாசலத்தை சேர்ந்தவர் கோபிநாத்,40; ஆரணியில் உள்ள தனியார் கார் ஷோரும் மேலாளரான இவர், நேற்று காலை விருத்தாசலத்தில் இருந்து ஆரணிக்கு, மாருதி சுவிப்ட் காரில் புறப்பட்டார்.
பகல் 1:00 மணியளவில், விழுப்புரம் பைபாஸ் சாலையில் எல்லீஸ்சத்திரம் அருகே சென்றபோது, காரின் முன் பகுதியில் இருந்து புகை வந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து, காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார்.
அதற்குள் காரின் முன்பகுதி தீப்பிடித்து எரிந்தது. தண்ணீரை ஊற்றி தீயை கட்டுப்படுத்த முயன்றார். தகவலறிந்த விழுப்புரம் தீயணைப்புத் துறையினர், விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
விழுப்புரம் தாலுகா போலீசார், தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தில், அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.