/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நின்றிருந்த லாரி மீது கார் மோதி விபத்து கண்டமங்கலம் அருகே வாலிபர் பலி
/
நின்றிருந்த லாரி மீது கார் மோதி விபத்து கண்டமங்கலம் அருகே வாலிபர் பலி
நின்றிருந்த லாரி மீது கார் மோதி விபத்து கண்டமங்கலம் அருகே வாலிபர் பலி
நின்றிருந்த லாரி மீது கார் மோதி விபத்து கண்டமங்கலம் அருகே வாலிபர் பலி
ADDED : ஜூன் 27, 2024 03:00 AM

கண்டமங்கலம்: கண்டமங்கலம் அருகே நின்றிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
உளுந்துார்பேட்டை கந்தசாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் அப்துல்ரகுமான், 32; அதே பகுதியில் ஜவுளி தொழில் செய்து வந்தார்.இவர் நேற்று முன்தினம் காலை ஜவுளி பொருட்கள் வாங்குவதற்காக புதுச்சேரிக்கு காரில் சென்றுள்ளார்.
காரில் அவரது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு, 32; சாய், 32; பிரேம்குமார், 32; ஆகியோர் சென்றுள்ளனர். காரை திருநாவுக்கரசு ஓட்டிச்சென்றார். இவர்கள் அனைவரும் புதுச்சேரியிலிருந்து இரவு வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.
இவர்கள் வந்த கார் இரவு 11.30 மணியளவில் மதகடிப்பட்டு அருகே வந்த போது,புதுச்சேரியிலேயே சில ஜவுளி பார்சல்களை மறதியாக வைத்துவிட்டு வந்ததையடுத்து அப்துல்ரகுமான் உள்ளிட்ட அனைவரும் மீண்டும் புதுச்சேரி நோக்கி சென்றுள்ளனர்.
கண்டமங்கலம் காவல் நிலையம் அருகே ரயில்வே மேம்பாலத்திற்கு வடக்கே உள்ள சர்வீஸ் சாலையில் செல்வதற்கு பதிலாக, மேம்பாலத்தை நோக்கி சென்றுள்ளனர்.
அப்போது கார் மேம்பாலத்தின் மீது நின்றிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த அப்துல்ரகுமான் இடிபாடுகளில் சிக்கி, உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். திருநாவுக்கரசு, சாய், பிரேம்குமார் ஆகிய மூவரும் படுகாயம் அடைந்தனர்.
கண்டமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் படுகாயம் அடைந்த மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.