/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஒரே பைக்கில் 6 பேர் பயணம் ஓட்டியவர் மீது வழக்கு
/
ஒரே பைக்கில் 6 பேர் பயணம் ஓட்டியவர் மீது வழக்கு
ADDED : மே 03, 2024 10:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம், -விழுப்புரத்தில் விதிகளை மீறி பைக் ஓட்டிச் சென்றவர் மீது, போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் மற்றும் போலீசார் கடந்த 2ம் தேதி விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் கல்லுாரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு பைக்கில், விதிகளை மீறி 6 பேர் அமர்ந்து சென்றனர்.
விதிமீறி பைக்கை ஓட்டி வந்த கடலுார், செம்மண்டலம் பகுதியைச் சேர்ந்தச் ராமலிங்கம் மகன் விமல்ராஜ் என்பவர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.