/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மூடிக்கிடக்கும் கால்நடை மருந்தகம் தினமும் செயல்பட நடவடிக்கை தேவை
/
மூடிக்கிடக்கும் கால்நடை மருந்தகம் தினமும் செயல்பட நடவடிக்கை தேவை
மூடிக்கிடக்கும் கால்நடை மருந்தகம் தினமும் செயல்பட நடவடிக்கை தேவை
மூடிக்கிடக்கும் கால்நடை மருந்தகம் தினமும் செயல்பட நடவடிக்கை தேவை
ADDED : மே 18, 2024 06:12 AM

வானுார் : பொம்மையார்பாளையத்தில் மூடிக்கிடக்கும் கால்நடை மருந்தகத்தால், கால்நடை வளர்ப்போர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
வானுார் அடுத்த பொம்மையார்பாைளயம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பிள்ளைச்சாவடி, குயிலாப்பாளையம், மாத்துார், பெரிய கொழுவாரி, சின்ன கொழுவாரி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான கால்நடை வளர்ப்போர் உள்ளனர். இப்பகுதிகளில், ஆடு, மாடு, எருமை, கோழி போன்ற கால்நடைகளை வளர்த்து வருகின்றனர்.
கால்நடை வளர்ப்போரின் வசதிக்காக, பொம்மையார்பாளையத்தில் கால்நடை மருந்தகம் கட்டப்பட்டுள்ளது. இந்த மருந்தகம் வாரத்தில் ஒரு நாள் மட்டுமே திறக்கப்படுகிறது.
அந்த சமயத்தில் மட்டும் கால்நடைகளுக்கு கிகிச்சை அளிக்கப்படுகிறது. இருப்பினும், மற்ற நேரங்களில் கால்நடைகளுக்கு திடீரென நோய் பாதிப்பு ஏற்பட்டால், சிகிச்சை பெற முடியாத சூழல் நிலவி வருகிறது. இதனால், கால்நடைகள் உயிரிழக்கின்றன.
தற்போது கோடை மழை பெய்து வருகிறது. இதனால் கால்நடைகளுக்கு நோய் தாக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால் எப்போதாவது திறக்கப்படும் கால்நடை மருந்தகத்தால், எந்த பயனும் இல்லை என கால்நடை வளர்ப்போர் குற்றம் சாட்டுகின்றனர்.
தினமும் கால்நடை மருந்தகம் திறந்து செயல்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

