/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கிணற்றில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு
/
கிணற்றில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு
ADDED : ஜூன் 30, 2024 11:30 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை: அவலுார்பேட்டை அருகே கிணற்றில் விழுந்த மாட்டை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.
அவலுார்பேட்டை அடுத்த எதப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் திருவேங்கடம். இவரது பசுமாடு அப்பகுதியில் உள்ள விளை நிலத்தில் நேற்று காலை 9:00, மணியளவில் மேய்ந்து கொண்டிருந்தது.
அப்போது அங்கிருந்த 60 அடி ஆழமுள்ள குறைந்த அளவு தண்ணீர் இருந்த பாசன கிணற்றில், தவறி விழுந்தது.
தகவலறிந்த மேல்மலையனுார் தீயணைப்பு நிலைய அலுவலர் பரஞ்ஜோதி தலைமையிலான வீரர்கள் சென்று, கிணற்றில் இறங்கி கயிறு கட்டி மாட்டை உயிருடன் மீட்டனர்.