ADDED : ஜூன் 06, 2024 02:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனம் அருகே மேய்ச்சலில் இருந்த பசு மாடு மின்னல் தாக்கி இறந்தது.
திண்டிவனம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் நேற்று மாலை 4.30 மணியளவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. ஆவணிப்பூரை சேர்ந்த சிவப்பிரகாசம் மனைவி உஷா என்பவரின் பசு மாடு, நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. மின்னல் தாக்கி மேய்ந்து கொண்டிருந்த பசு மாடு பரிதாபமாக இறந்தது.