/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குடும்பத்தோடு தற்கொலைக்கு முயன்ற பிரபல ரவுடி கோட்டக்குப்பத்தில் பரபரப்பு
/
குடும்பத்தோடு தற்கொலைக்கு முயன்ற பிரபல ரவுடி கோட்டக்குப்பத்தில் பரபரப்பு
குடும்பத்தோடு தற்கொலைக்கு முயன்ற பிரபல ரவுடி கோட்டக்குப்பத்தில் பரபரப்பு
குடும்பத்தோடு தற்கொலைக்கு முயன்ற பிரபல ரவுடி கோட்டக்குப்பத்தில் பரபரப்பு
ADDED : மே 01, 2024 07:18 AM
மரக்காணம்: கோட்டக்குப்பம் அருகே, பிரபல ரவுடி குடும்பத்தோடு பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அடுத்த குயிலாப்பாளையத்தை சேர்ந்தவர் ராஜ்குமார், 39; பிரபல ரவுடி. இவர் மீது கொலை, கொலை முயற்சி உட்பட 24 வழக்குகள் உள்ளது.
புதுச்சேரி, தமிழகத்தில் 9 கொலை வழக்குகள் உள்ளன. வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் சரிவர ஆஜராகாததால், பிடி ஆணையில் கைதான ராஜ்குமார், பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சில தினங்களுக்கு முன், சிறையிலிருந்து வெளியே வந்த இவர், விழுப்புரம் கோர்ட்டில் தினமும் கையெழுத்திட்டு வருகிறார்.
இந்நிலையில், நேற்று ஆரோவில் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன், விசாரணைக்கு வரும்படி, ராஜ்குமாரை போனில் தொடர்பு கொண்டு பலமுறை பேசியுள்ளார்.
இதனால் விரக்தியடைந்த ராஜ்குமார், தனது மனைவி சரசு மற்றும் 2 மகன்களை அழைத்துக் கொண்டு, பெரிய முதலியார்சாவடி, இ.சி.ஆர்., சாலையில், பொதுமக்கள் முன்னிலையில் தன் மீதும், குடும்பத்தினர் மீதும் பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.
தகவலறிந்த கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் சக்தி தலைமையிலான போலீ சார், ராஜ்குமாரை சமாதானம் செய்தனர். மேலும், ராஜ் குமார் மீது தற்கொலைக்கு முயன்றதாக, கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.