/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தனியார் 'டிவி' ஷோரூமில் தீ விபத்து ரூ.25 லட்சம் பொருட்கள் சேதம்
/
தனியார் 'டிவி' ஷோரூமில் தீ விபத்து ரூ.25 லட்சம் பொருட்கள் சேதம்
தனியார் 'டிவி' ஷோரூமில் தீ விபத்து ரூ.25 லட்சம் பொருட்கள் சேதம்
தனியார் 'டிவி' ஷோரூமில் தீ விபத்து ரூ.25 லட்சம் பொருட்கள் சேதம்
ADDED : ஜூன் 25, 2024 06:34 AM

விழுப்புரம் : விழுப்புரத்தில் தனியார் 'டிவி' ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்தில், 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.
விழுப்புரத்தில், திருச்சி மெயின்ரோட்டில் தனியார் மருத்துவமனை எதிரே தனியார் 'டிவி' ஷோரூம் உள்ளது. இங்கு வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று முன்தினம் கடை விடுமுறை என்பதால் மூடப்பட்டிருந்தது.
நேற்று அதிகாலை 3:00 மணியளவில் ஷோரூமின் பின் பகுதியில் மின் சாதன பொருள்கள் அடுக்கி வைத்திருந்த பகுதியில் தீப்பிடித்தது.
இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள், கடை ஊழியர்களுக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர் சிவசங்கரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் 30 நிமிடம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் 12 எல்.இ.டி., டிவிக்கள், ஏ.சி., ஹீட்டர் உட்பட 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருட்கள் எரிந்து சேதமானது.
கடை மேலாளர் சிவா கொடுத்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.