/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஓடும் பஸ்சில் டயர் வெடித்து சிறுமி படுகாயம்
/
ஓடும் பஸ்சில் டயர் வெடித்து சிறுமி படுகாயம்
ADDED : மார் 29, 2024 03:09 AM
விழுப்புரம்: விழுப்புரம் அருகே ஓடும் தனியார் பஸ்சின் டயர் வெடித்ததில், பஸ்சில் சென்ற சிறுமி படுகாயமடைந்தார்.
விழுப்புரத்தில் இருந்து பண்ருட்டிக்கு நேற்று முன்தினம் இரவு தனியார் பஸ் சென்றது. பண்ருட்டி அருகே வாணியம்பாளையம் பகுதியில் சென்றபோது, திடீரென பஸ்சின் பின்பக்க டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் பஸ் குளுங்கியது. இதில், பஸ்சில் அமர்ந்திருந்த பஞ்சமாதேவி காமன் கோவில் தெருவைச் சேர்ந்த கலியபெருமாள் மகள் பிரியதர்ஷினி, 17; பஸ்சுக்குள் விழுந்ததில் படுகாயமடைந்தார். அவரது கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடன் அவர், பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து, அவரது தாய் வீரம்மாள், 42; கொடுத்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.