/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஏ.கோவிந்தசாமி நினைவு மண்டப பணி இழுபறி மாஜி எம்.எல்.ஏ., சம்பத் குற்றச்சாட்டு
/
ஏ.கோவிந்தசாமி நினைவு மண்டப பணி இழுபறி மாஜி எம்.எல்.ஏ., சம்பத் குற்றச்சாட்டு
ஏ.கோவிந்தசாமி நினைவு மண்டப பணி இழுபறி மாஜி எம்.எல்.ஏ., சம்பத் குற்றச்சாட்டு
ஏ.கோவிந்தசாமி நினைவு மண்டப பணி இழுபறி மாஜி எம்.எல்.ஏ., சம்பத் குற்றச்சாட்டு
ADDED : மே 20, 2024 05:28 AM
விழுப்புரம், : ஏ.கோவிந்தசாமியின் நினைவு மண்டப பணியை நிறைவு செய்வதற்கே மூன்று ஆண்டுகள் இழுபறி நிலை உள்ளது என்று, முன்னாள் எம்.எல்.ஏ.,தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமியின் நினைவு நாளை முன்னிட்டு, அவரது படத்திற்கு பா.ஜ., மாநில துணைத் தலைவரான முன்னாள் எம்.எல்.ஏ., சம்பத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த 1957ம் ஆண்டு தி.மு.க., பொது தேர்தலை சந்தித்த போது, எந்த தேர்தல் சின்னமும் இல்லை. எனது தந்தை ஏ.கோவிந்தசாமி, தான் போட்டியிட்டு வென்ற உதயசூரியன் சின்னத்தை தி.மு.க.,விற்கு கொடுத்து உதவினார்.
கடந்த 2021ம் ஆண்டு, தமிழக சட்டப் பேரவை கூட்டத்தில், ஏ.கோவிந்தசாமியின் நினைவாக, ரூ.3.75 கோடி மதிப்பில் உருவச்சிலையுடன் நினைவு அரங்கம் அமைக்கப்படும்' என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, விழுப்புரம் வழுதரெட்டியில் 1.12 ஹெக்டேர் பரப்பளவில் மணி மண்டப பணிகள் துவங்கியது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆய்வு செய்த உயர்கல்வித்துறை அமைச்சர், இன்னும் ஓரிரு மாதங்களில் பணிகள் முடிக்கப்பட்டு, முதல்வர் திறந்து வைப்பார் என தெரிவித்தார்.
தி.மு.க.,விற்கு உதயசூரியன் சின்னத்தை வழங்கிய, ஏ.கோவிந்தசாமியின் நினைவு மண்டப பணியை நிறைவு செய்வதற்கே மூன்று ஆண்டுகள் இழுபறி நிலை உள்ளது, என்ற முன்னாள் எம்.எல்.ஏ., சம்பத் தெரிவித்தார்.

