/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஒடிசாவை சேர்ந்தவர் வாகனம் மோதி பலி
/
ஒடிசாவை சேர்ந்தவர் வாகனம் மோதி பலி
ADDED : ஜூன் 05, 2024 11:03 PM
விழுப்புரம்: விழுப்புரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில், ஒடிசாவை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் இறந்தார்.
ஒடிசா மாநிலம், பாலேஸ்வர் மாவட்டம், சிக்கார்வாலா பகுதியை சேர்ந்தவர் ரத்னாநாயக் மகன் அனுவேஷ்குமார் நாயக், 29; பட்டதாரியான இவர், புதுச்சேரி அடுத்த கரியமாணிக்கம் பகுதியில் தங்கி, அங்குள்ள தனியார் டயர் தயாரிப்பு நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த 3ம் தேதி அதிகாலை 2:00 மணிக்கு கரியமாணிக்கத்தில் இருந்து, விழுப்புரம் நோக்கி பைக்கில் அவர் வந்தார். அப்போது, விழுப்புரம் அடுத்த பில்லுார் புதிய மேம்பாலம் அருகே வந்தபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் அனுவேஷ்குமார் நாயக் மீது மோதியவிட்டு நிற்காமல் சென்றது. படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே இறந்தார்.
விபத்து குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரித்து வருகின்றனர்.