/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை தென்புதுப்பட்டு மக்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு

ADDED : ஏப் 02, 2024 05:20 AM

செஞ்சி : தென்புதுப்பட்டில் ஏரி, குளம் புறம்போக்கில் கட்டியுள்ள வீடுகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்பு கொடியேற்றி தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர்.
செஞ்சி அடுத்த தென்புதுப்பட்டு கிராமத்தில் குளம் புறம்போக்கில் 15 பேரும், ஏரி புறம்போக்கில் 6 பேரும் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியுள்ளனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற கடந்த 3 மாதங்களுக்கு முன் ஆக்கிரமிப்பாளர்களுக்கு வருவாய்த் துறையினர் நோட்டீஸ் கொடுத்தனர். பிறகு ஆக்கிரமிப்பை அகற்ற சென்றனர்.
அப்போது எதிர்ப்பு தெரிவித்த ஆக்கிரமிப்பாளர்கள், வீட்டை காலி செய்ய 3 மாதம் கால அவகாசம் கேட்டனர். இதனால் அதிகாரிகள் நடவடிக்கையை தற்காலிகமாக கைவிட்டனர்.
மூன்று மாத கால அவகசம் முடிந்த நிலையில், தேர்தல் முடிந்ததும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த் துறையினர் முடிவு செய்துள்ளனர்.
இதையடுத்து ஆக்கிரமிப்பாளர்கள் வீடுகளில் கருப்பு கொடியேற்றி, தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்தனர்.
நேற்று தாசில்தார் ஏழுமலை சமாதான பேச்சு வார்த்தை நடத்தினார். அதில், அனைவருக்கும் அதே கிராமத்தில் வேறு இடத்தில் பட்டா வழங்கப்படும் என தெரிவித்தார்.
ஆனால் போராட்டக்காரர்கள் ஆக்கிரமிப்பை அகற்றக் கூடாது என கேட்டதால் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால், போராட்டத்தை தொடர போவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.