/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
போலி ஏ.டி.எம்.,கார்டு கொடுத்து பணம் அபேஸ் செய்த வழக்கில் ஒருவர் கைது

ADDED : ஆக 01, 2024 07:11 AM

திண்டிவனம்: திண்டிவனத்தில் போலி ஏ.டி.எம்.கார்டு கொடுத்து மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம் டவுன் போலீசார் நேரு வீதியில் நேற்று முன்தினம் மாலை ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை படித்து விசாரித்தனர்.
அதில் அவர், திருநெல்வேலி மாவட்டம், புளியங்குடி கிராமத்தை சேர்ந்த முகமது கனி மகன் முகமது மோயீஸ், 35; என்பதும், இவர்திண்டிவனம் நேரு வீதியிலுள்ள ஸ்டேட் பாங்க்கில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில், வீராங்குளத்தைச் சேர்ந்த சுமதி என்பவரிடம் போலி ஏ.டி.எம்.கார்டு கொடுத்து 8,500 ரூபாய் மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. உடன் அவர் மீத வழக்குப் பதிந்து கைது செய்து, போலி ஏ.டி.எம்., கார்டுககளை பறிமுதல் செய்தனர்.