/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பைக் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலி
/
பைக் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலி
ADDED : ஜூன் 11, 2024 06:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: ரோஷனை அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
செஞ்சி அருகே தளவாளப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சின்னராஜ் மகன் மணிகண்டன்,30; இவர், நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் திண்டிவனத்தில் இருந்து செஞ்சி நோக்கி சென்றார்.
விழுக்கம் கிராமம் அருகே சென்ற போது, எதிரே வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
ரோஷனை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.