/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மரத்தை வேருடன் பிடுங்கி சாலை குறுக்கே வைத்த அவலம்
/
மரத்தை வேருடன் பிடுங்கி சாலை குறுக்கே வைத்த அவலம்
ADDED : ஜூன் 09, 2024 04:50 AM

மயிலம் : மயிலத்தில் சாலை பணிகளுக்காக பேரிகார்டுக்கு பதில் மரத்தை வேருடன் பிடுங்கி சாலையின் குறுக்க வைத்துள்ளனர்.
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, சில தினங்களுக்கு முன் நாடு முழுதும் கொண்டாடப்பட்டு, புதிய மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது.
மயிலம் பகுதியில் புதிதாக நான்கு வழிச் சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இதற்காக மயிலம் காவல் நிலையம் அருகே பணி நிறைவு பெறாத சாலையில் வாகனங்கள் செல்வதைத் தவிர்க்க அப்பகுதியில் இருந்த மரத்தை வேருடன் பிடுங்கி சாலையின் குறுக்கே வைத்துள்ளனர்.
பொதுவாக சாலையின் குறுக்கே பேரி கார்டுகள் வைப்பது வழக்கம். ஆனால், இங்கு மரத்தை வேருடன் பிடுங்கி வைத்திருப்பது பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.