/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வீணாகும் உழவர் சந்தை கட்டடம் குடிபிரியர்களுக்கு புகலிடமாகும் அவலம்
/
வீணாகும் உழவர் சந்தை கட்டடம் குடிபிரியர்களுக்கு புகலிடமாகும் அவலம்
வீணாகும் உழவர் சந்தை கட்டடம் குடிபிரியர்களுக்கு புகலிடமாகும் அவலம்
வீணாகும் உழவர் சந்தை கட்டடம் குடிபிரியர்களுக்கு புகலிடமாகும் அவலம்
ADDED : ஜூலை 08, 2024 05:01 AM

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த சூரப்பட்டு கிராமத்தில் விவசாயிகள் பயன்படுத்தாத உழவர் சந்தை கட்டடம் புதர் மண்டி வீணாகி வருகிறது.
விழுப்புரம் அடுத்த சூரப்பட்டு கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த விளை பொருட்களை திருவண்ணாமலை சாலையோரத்தில் வைத்து விறப்னை செய்தனர். இந்த பொருட்களை வாங்க, அங்குள்ள பொதுமக்கள் கூடியதால் சாலையில் போக்குவரத்து பாதித்தது.
இதையொட்டி, வேளாண் துறை சார்பில், விவசாயிகள் தங்களின் பொருட்களை நேரடியாக விற்பனை செய்வதற்கான உழவர் சந்தையை அவர்கள் வியாபாரம் செய்த இடத்திற்கு அருகே தனியாக கட்டினர். இந்த உழவர் சந்தை 40 வியாபாரிகள் தங்களின் பொருட்களை விற்பனை செய்யும் அளவுக்கு கட்டப்பட்டுள்ளது.
உழவர் சந்தை உள்ளே அடங்கிய நிலையில் இருப்பதால் விற்பனையாகாது எனக்கூறி விவசாயிகள் அங்கு செல்ல மறுத்தனர். வேளாண் அதிகாரிகளும், சாலையோரம் விற்பனை செய்ய அனுமதிக்காததால், இந்த விவசாயிகள் விழுப்புரத்தில் உள்ள உழவர் சந்தைக்கு சென்று தங்களின் விளை பொருட்களை விற்பனை செய்கின்றனர்.
இதனால், சூரப்பட்டு கிராமத்தில் கட்டியுள்ள உழவர் சந்தை கட்டடம் எவ்வித பயன்பாடின்றி வீணாகியது.
இந்த கட்டடத்தை அதிகாரிகளும் கண்காணிக்காததால், தற்போது குடிபிரியர்கள் அங்கு வந்து மதுபானம் அருந்தும் புகலிடமாகவே மாறியுள்ளது. இதனால், அந்த கட்டடத்தில் தற்போது சாராய பாக்கெட்டுகள், மதுபாட்டில்கள் மட்டுமே கிடக்கிறது.
விவசாயிகளுக்காக கட்டப்பட்டு வீணாகி வரும் அரசு கட்டடத்தை பராமரிப்பு பணிகள் செய்து, அங்கு உழவர் சந்தை இயங்குவதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்க வேண்டும்.