sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கஞ்சா விற்ற பெண்ணுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை

/

கஞ்சா விற்ற பெண்ணுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை

கஞ்சா விற்ற பெண்ணுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை

கஞ்சா விற்ற பெண்ணுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை


ADDED : மே 28, 2024 08:29 PM

Google News

ADDED : மே 28, 2024 08:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்:திண்டிவனம் அடுத்த, கூட்டேரிப்பட்டி ரயில்வே மேம்பாலம் அருகே, 2022 அக்டோபரில் கஞ்சா விற்பனை செய்த பண்ருட்டி ரயில்வே பீடர் சாலையை சேர்ந்த சிவஞானம் மனைவி விஜயா, 63, என்பவரை, 2 கிலோ கஞ்சாவுடன் மயிலம் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர் விழுப்புரத்தில் தங்கியிருந்த வாடகை வீட்டை சோதனை செய்து, 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக விஜயா மீது, விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணையில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கொடுமுடி சேரலாதன் ஆஜரானார்.

வழக்கை விசாரித்த நீதிபதி வெங்கடேசன், கஞ்சா கடத்தி விற்பனை செய்த விஜயாவிற்கு, 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அபராதம் கட்ட தவறினால், மேலும் மூன்று ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டார்.

அதை தொடர்ந்து விஜயா, விழுப்புரம் அடுத்த வேடம்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us