நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அருகே நர்சிங் கல்லுாரி மாணவி காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் அடுத்த கண்டாச்சிபுரம், ஆ.கூடலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் மகள் அனிதா, 19; மணலுார்பேட்டையில் தனியார் நர்சிங் கல்லுாரியில் டிப்ளமோ நர்சிங் முடித்துள்ளார்.
கடந்த 27ம் தேதி காலை, வீட்டிலிருந்து துணி கடைக்குச் செல்வதாக கூறிச்சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அனிதாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், காணை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.