/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அங்காளம்மன் கோவிலில் ஆடி அமாவாசை உற்சவம்
/
அங்காளம்மன் கோவிலில் ஆடி அமாவாசை உற்சவம்
ADDED : ஆக 04, 2024 11:38 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: சிறுவந்தாடு அங்காளம்மன் கோவிலில் ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடு நடந்தது.
அதனையொட்டி, நேற்று காலை 8:00 மணிக்கு மூலவர் அங்காளம்மன், ஆனந்தாயி, பூங்காவனம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் தீபாராதனையும் நடந்தது.
தொடர்ந்து மாலை உற்சவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கோவில் மண்டபத்தில் உட்பிரகார வலம் வந்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.