/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மூங்கிலம்மன் கோவிலில் ஆடிப்பூர பாலாபிேஷகம்
/
மூங்கிலம்மன் கோவிலில் ஆடிப்பூர பாலாபிேஷகம்
ADDED : ஆக 08, 2024 11:18 PM

திண்டிவனம்: திண்டிவனம் தீர்த்தக்குளம், மூங்கிலம்மன் கோவிலில் 23ம் ஆண்டு ஆடிப்பூரம் பால் அபிேஷக விழா நடந்தது.
இதையொட்டி, பக்தர்கள் பால் குடம் எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வமாக வந்தனர். கோவில் தர்மகர்த்தா கவுன்சிலர் ரவிச்சந்திரன், நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், நிலக்கிழார் ரவிச்சந்திரன், கோவில் பூசாரிகள் பழனி, ஏழுமலை, கணக்கர் சங்கர் மற்றும் நிர்வாகிகள் குமார், காமராஜ், குரு, கார்த்திகேயன் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர். ஊர்வலத்திற்கு பின், மூங்கிலம்மன் மற்றும் அருகே உள்ள சேத்துக்கால் செல்லி அம்மனுக்கும் பால் அபிேஷகம் நடந்தது.
விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு மூங்கிலம்மன் சந்தனக் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.