ADDED : ஆக 08, 2024 12:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி வரதராஜபெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு ஆடிப்பூர உற்சவ விழா நடந்தது.
விக்கிரவாண்டி பெருந்தேவி தாயார் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஆண்டாளுக்கு திருமஞ்சனம் செய்து சிறப்பு அலங்காரம், வளையல் அணிவித்து மகாதீப ஆராதனை நடந்தது.பெண்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற மாங்கல்ய கயிறு,வளையல்,மஞ்சள் வைத்து படையலிட்டு பிரசாதமாக வினியோகித்தனர். பூஜையை கோவில் பட்டாச்சாரியார் மலோலன் செய்திருந்தார்.
விக்கிரவாண்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பெண்கள் திரளாக கலந்து சுவாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை கோவில் திருப்பணிக்குழுவினர் செய்திருந்தனர்.