ADDED : மே 06, 2024 05:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரத்தில் வயிற்று வலியால் கல்லுாரி மாணவி துாக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
விழுப்புரம் அடுத்த கண்டமானடி பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார், 42; இவரது மகள் சசிரேகா, 19; இவர், விழுப்புரத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் 3ம் ஆண்டு பி.காம்., படித்து வந்தார். இவர் நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிபட்டு வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் வலி ஏற்பட்டதால், மனமுடைந்த அவர் வீட்டில் மின் விசிறியில், துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.