/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அச்சரம்பட்டு - பாப்பாஞ்சாவடி இணைப்பு சாலை படுமோசம்: வாகன ஓட்டிகள் கடும் அவதி
/
அச்சரம்பட்டு - பாப்பாஞ்சாவடி இணைப்பு சாலை படுமோசம்: வாகன ஓட்டிகள் கடும் அவதி
அச்சரம்பட்டு - பாப்பாஞ்சாவடி இணைப்பு சாலை படுமோசம்: வாகன ஓட்டிகள் கடும் அவதி
அச்சரம்பட்டு - பாப்பாஞ்சாவடி இணைப்பு சாலை படுமோசம்: வாகன ஓட்டிகள் கடும் அவதி
ADDED : ஜூலை 18, 2024 11:28 PM

வானுார்: துருவை கிராமத்தில் இருந்து அச்சரம்பட்டு செல்லும் சாலையும், பாப்பாஞ்சாவடியை இணைக்கும் சாலையும் படுமோசமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
வானுார் அடுத்த துருவை கிராமத்தில் இருந்து அச்சரம்பட்டு வழியாக திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதிக்கு செல்லும் சாலை உள்ளது. 3.5 கி.மீ., துாரம் உள்ள இந்த சாலையின் இடையே புதுச்சேரி - திண்டிவனம் புறவழிச்சாலை அமைந்துள்ளது.
இந்த பைபாஸ் சாலையை கடந்து தான், துருவை கிராம மக்கள் மட்டுமின்றி ஒட்டம்பாளையம், ராயப்பேட்டை, புதுச்சேரி மாநிலமான சஞ்சீவிநகர், ஆலங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் சென்று வருகின்றனர்.
புறவழிச்சாலையில் இருந்து துருவை கிராமத்திற்கு 1.5 கி.மீ., துாரமும், அச்சரம்பட்டுக்கு 2 கி.மீ., துாரமும் கொண்டுள்ள இந்த தார் சாலை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது.
தற்போது ஜல்லிகள் பெயர்ந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையாக மாறியுள்ளது. இது மட்டுமின்றி, அச்சரம்பட்டில் இருந்து பாப்பாஞ்சாவடி செல்லும் இணைப்பு சாலையும் படுமோசமாக உள்ளது.
குறிப்பாக அச்சரம்பட்டு மற்றும் சுற்றியுள்ள பொது மக்கள் பஞ்சவடீ கோவில், வானுார் கோர்ட் மற்றும் சுற்றியுள்ள பகுதிக்கு செல்ல வேண்டுமானால், இந்த சாலையை தான் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். எனவே இந்த 2 சாலைகளையும் அதிகாரிகள் விரைந்து சீரமைக்க நடவடக்கை எடுக்க வேண்டும்.