/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை இறுதி கலந்தாய்வு
/
அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை இறுதி கலந்தாய்வு
அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை இறுதி கலந்தாய்வு
அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை இறுதி கலந்தாய்வு
ADDED : ஆக 25, 2024 06:13 AM
விழுப்புரம்: விழுப்புரம் அரசு கலை கல்லுாரியில், இந்த கல்வியாண்டில் இறுதியாக காலியாகவுள்ள இடங்களுக்கு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வரும் 27ம் தேதி துவங்குகிறது.
விழுப்புரம் அரசு கலைக் கல்லுாரியில் 2024-25ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடக்கிறது. வரும் 27 ம் தேதி காலை 10.00 மணிக்கு அறிவியல் படிப்பு கலைப்பிரிவு விண்ணப்பித்தோருக்கு தகுதி மதிப்பெண் 219 முதல் 200 வரை கலந்தாய்வு நடக்கிறது.
தொடர்ந்து 11;00 மணிக்கு கணிதம் படித்து கலைப்பிரிவு விண்ணப்பித்தோருக்கு தகுதி மதிப்பெண் 279 முதல் 270 வரை நடக்கிறது.
வரும் 28 ம் தேதி காலை 10:00 மணிக்கு பி.எஸ்சி., கணிதம் தகுதி மதிப்பெண் 399 முதல் 180 வரையிலும், 11.00 மணிக்கு பி.ஏ., தமிழ் (தமிழ் மதிப்பெண் 75 வரை) கலந்தாய்வு நடக்கிறது.
இந்த கலந்தாய்வில் பங்கேற்போர் கட்டாயம், பதிவிறக்கம் செய்த விண்ணப்பம், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் அசல் மற்றும் இரு நகல்கள், பள்ளி மாற்று சான்றிதழ், ஜாதி சான்று அசல், இரு நகல்களை கொண்டு வரவேண்டும்.
பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 3, பெற்றோர் அல்லது பாதுகாவலர் புகைப்படம் 1, வங்கி கணக்கு புத்தக முதற்பக்க நகல், ஆதார் நகல் 3, உரிய சேர்க்கை கட்டணத்தை கொண்டு வர வேண்டும் என முதல்வர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.