/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் அரசு மகளிர் கல்லூரியில் சேர்க்கை
/
விழுப்புரம் அரசு மகளிர் கல்லூரியில் சேர்க்கை
ADDED : மே 28, 2024 06:28 AM
விழுப்புரம் : விழுப்புரம் எம்.ஜி.ஆர்., அரசு மகளிர் கலை மற் றும் அறிவியல் கல்லூரியில் இந்தாண்டு மாணவியர் சேர்க்கை நாளை (29ம் தேதி) தொடங்குகிறது.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் தாமோதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
விழுப்புரம் எம்.ஜி.ஆர்.,அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (2024-25) கல்வி ஆண்டுக் கான மாணவியர் சேர்க்கை தொடங்குகிறது. முதற்கட்டமாக, சிறப்பு ஒதுக்கீட்டி னருக்கான கலந்தாய்வு 29ம் தேதி மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் முன்னுரிமை பிரிவு மாணவியருக்கு நடக்கிறது.
இதனையடுத்து 30ம் தேதி விளையாட்டு பிரிவு மாணவிகளுக்கு (தேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் சான்றிதழ் பெற்றவர் களுக்கு சிறப்பு சேர்க்கை நடைபெறும்.
இதனால், இந்த கல்லூரியில் விண்ணப்பித்த மாணவிகள் மட்டும் இந்த சேர்க்கை கலந்தாய்வில் கலந்துகொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.