/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அ.தி.மு.க., கவுன்சிலர் தி.மு.க.,வில் ஐக்கியம்
/
அ.தி.மு.க., கவுன்சிலர் தி.மு.க.,வில் ஐக்கியம்
ADDED : ஜூலை 04, 2024 12:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் அ.தி.மு.க., கவுன்சிலர் அமைச்சர் சேகர் பாபு முன்னிலையில் தி.மு.க., வில் இணைந்தார்.
அ.தி.மு.க மாவட்ட ஜெ., பேரவை துணைத் தலைவர் ரமேஷ். பேரூராட்சி கவுன்சிலராகவும் உள்ளார்.
இவர் அ.தி.மு.க., விலிருந்து விலகி நேற்று, விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க., தேர்தல் அலுவலகத்தில் அமைச்சர் சேகர் பாபு முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தார்.
அமைச்சர் கணேசன், எம்.எல்.ஏ.,க்கள் சபா ராஜேந்திரன், ஜோசப் சாமுவேல், தயாகம் கவி, சென்னை மேயர் பிரியா ராஜன், பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம், நகர செயலாளர் நைனாமுகமது உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.