/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனம் 14வது வார்டில் அ.தி.மு.க., தேர்தல் பிரசாரம்
/
திண்டிவனம் 14வது வார்டில் அ.தி.மு.க., தேர்தல் பிரசாரம்
திண்டிவனம் 14வது வார்டில் அ.தி.மு.க., தேர்தல் பிரசாரம்
திண்டிவனம் 14வது வார்டில் அ.தி.மு.க., தேர்தல் பிரசாரம்
ADDED : ஏப் 11, 2024 04:59 AM

திண்டிவனம்: திண்டிவனம் நகராட்சி 14வது வார்டில் அ.தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் நடந்தது.
விழுப்புரம் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் பாக்யராஜை ஆதரித்து, திண்டிவனம் நகராட்சி 14வது வார்டில் பொது மக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி வீடு, வீடாக பிரசாரம் நேற்று மாலை நடந்தது.
விழுப்புரம் மாவட்ட ஜெ.,பேரவை இணை செயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான வடபழனி தலைமையில், தாடிக்காரன் குட்டை தெரு, ரங்கன் தெரு, ஒத்தவடை தெரு, செஞ்சி ரோடு, எம்.ஜி.ஆர்.நகர் உள்ளிட்ட இடங்களில் அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாக சென்று இரட்டை இலைக்கு ஓட்டு சேகரித்தனர்.
இதில் மாநில எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் எஸ்.இ.ஏழுமலை, மாவட்ட இணை செயலாளர்கள் தளபதிரவி, ஏழுமலை, முன்னாள் கவுன்சிலர்கள் ராமன், ஞானவேல், நிர்வாகிகள் மகேஷ், ராஜா, காளிமுத்து, வெங்கடேசன், நெடுஞ்செழியன், முருகன், தட்சிணாமூர்த்தி, கார்த்திக், மகளிர் அணி பரமேஸ்வரி, இந்திரா, மீனாட்சி உட்பட பலர் பங்கேற்றனர்.

