/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அ.தி.மு.க., மாஜி எம்.எல்.ஏ., பிரசாரம்
/
அ.தி.மு.க., மாஜி எம்.எல்.ஏ., பிரசாரம்
ADDED : ஏப் 16, 2024 11:59 PM

விழுப்புரம் : விழுப்புரம் லோக்சபா (தனி) தொகுதி வேட்பாளர் பாக்யராஜை ஆதரித்து முன்னாள் எம்.எல்.ஏ., குமரகுரு உளுந்துார்பேட்டை சுற்றியுள்ள பகுதிகளில் ஓட்டு சேகரித்தார்.
உளுந்துார்பேட்டை சுற்றியுள்ள ஏ.புத்துார், சுந்தரவாண்டி, சாலபாக்கம், அலங்கிரி, செம்பிமாதேவி, செட்டியந்தல், பிடாகம், குணமங்கலம், ஆர்.ஆர்.குப்பம், எம்.எஸ். தக்கா மற்றும் உளுந்துார்பேட்டை நகர பகுதியில் விழுப்புரம் லோக்சபா (தனி) தொகுதி வேட்பாளர் பாக்யராஜை ஆதரித்து முன்னாள் எம்.எல்.ஏ., குமரகுரு ஓட்டு சேகரித்தார்.
அப்போது அவர் பேசுகையில், 'கடந்த மூன்று ஆண்டுகளில் வீட்டு உபயோக பொருட்கள், கட்டுமான பொருட்கள் அனைத்து விலையும் பல மடங்குகள் உயர்ந்துள்ளது. இதுமட்டுமல்லாமல் அனைத்து வரிகளும் உயர்ந்துள்ளது.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அனைத்து சிறப்பு திட்டங்களும் தி.மு.க., அரசு முடக்கியுள்ளது. இதுதான் தி.மு.க., அரசின் சாதனை, முதல்வர் ஸ்டாலினுக்கு மக்கள் மீது சிறிதும் அக்கறை இல்லை அவருக்கு அவரது குடும்ப அரசியலை பார்பதற்கே நேரம் சரியாக உள்ளது.
இப்போது கஞ்சா விற்பதால் பெரும்பாலான பள்ளி மாணவர்கள் போதைக்கு அடிமையாகிசிறு வயதிலேயே வாழ்க்கையை சீரழித்துக் கொள்கிறார்கள். இது தான் இப்போது உள்ள அரசின் சாதனை.
மக்கள் அனைவரும் நன்கு அறிந்து நடைபெற உள்ள தேர்தலில் புதிய மாற்றத்ததை உருவாக்க இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்' என்றார்.
அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், தே.மு.தி.க., ஒன்றிய செயலாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

