/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அ.தி.மு.க., உறுப்பினர் அட்டை; மாவட்ட செயலாளர் வழங்கல்
/
அ.தி.மு.க., உறுப்பினர் அட்டை; மாவட்ட செயலாளர் வழங்கல்
அ.தி.மு.க., உறுப்பினர் அட்டை; மாவட்ட செயலாளர் வழங்கல்
அ.தி.மு.க., உறுப்பினர் அட்டை; மாவட்ட செயலாளர் வழங்கல்
ADDED : ஆக 02, 2024 11:34 PM

விழுப்புரம் : விழுப்புரம் வடக்கு நகர அ.தி.மு.க., சார்பில், கட்சியினருக்கு புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
விழுப்புரம் முத்தோப்பு, அகரம்பாட்டையில் பகுதியில் நடந்த நிகழ்ச்சிக்கு, நகர செயலாளர் ராமதாஸ் தலைமை தாங்கினார்.
நகர துணைச் செயலாளர் செந்தில், முன்னாள் நகர செயலாளர் ஜானகிராமன், பேரவை இணைச் செயலர் அசோக்குமார், மாவட்ட மாணவரணி சக்திவேல், நகர மன்ற கவுன்சிலர்கள் ராதிகா, பத்மாவதி, சேகர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் சண்முகம், வடக்கு நகரத்திற்குட்பட்ட 17 வார்டுகளைச் சேர்ந்த கட்சியினர் 11 ஆயிரம் பேருக்கு, புதிய உறுப்பினர் அட்டையை வழங்கி தொடங்கி வைத்தார். மாவட்ட வழக்கறிஞரணி ஸ்ரீதர், பொதுக்குழு உறுப்பினர் பன்னீர், வார்டு செயலாளர்கள் பாலச்சந்தர், ஜெகன், நகர இளைஞரணி பாஸ்கர், பிரதிநிதி தனுசு, தகவல் தொழில்நுட்ப அணி ஜெகதீஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர்.