/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மா.கம்யூ., ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க.,வினர் தகராறு போலீசார் சமாதானம்
/
மா.கம்யூ., ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க.,வினர் தகராறு போலீசார் சமாதானம்
மா.கம்யூ., ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க.,வினர் தகராறு போலீசார் சமாதானம்
மா.கம்யூ., ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க.,வினர் தகராறு போலீசார் சமாதானம்
ADDED : ஜூலை 25, 2024 11:28 PM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் மின் கட்டணம் உயர்வை கண்டித்து நடந்த மா.கம்யூ., ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க.,வினர் தகராறு செய்ததால் பரபரப்பு நிலவியது.
விக்கிரவாண்டி பஸ் நிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர் கிருஷ்ணராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு சங்கரன், மாவட்ட குழு சித்ரா தண்டபாணி முன்னிலை வகித்தனர்.
ஆர்பாட்டத்தில் மாவட்ட குழு கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், 'மின் கட்டண உயர்வுக்கு அ.தி.மு.க., முன்னாள் முதல்வர் பழனிசாமி போட்ட உதய் மின் திட்ட ஒப்பந்தம் தான் காரணம்' என பேசினார்.
தொடர்ந்து அ.தி.மு.க.,வை தாக்கி பேசிய மா.கம்யூ., கட்சியினரால் ஆத்திரமடைந்த அ.தி.மு.க., நகர செயலாளர் பூர்ணராவ் தனது ஆதரவாளர்கள் சசிகுமார், ராஜி தெய்வேந்திரன் உள்ளிட்ட கட்சியினருடன் திரண்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மா.கம்யூ.,வினரிடம் எப்படி பழனிசாமியை தாக்கி பேசலாம் என தட்டிக்கேட்டு தகராறு செய்தனர். இரு கட்சியினரிடையேயும் ஏற்பட்ட தகராறால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இரு கட்சியினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
ஒன்றிய குழு கலியமூர்த்தி, கிருஷ்ணராஜ் மற்றும் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
இரு தரப்பு புகார்
இதுகுறித்து அ.தி.மு.க.,வினர் மா.கம்யூ., வழக்கறிஞர் சங்கரன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவர் மீதும், மா.கம்யூ.,வினர் அ.தி.மு.க., நகர செயலாளர் பூர்ணராவ், மாவட்ட விவசாய அணி துணைத் தலைவர் பலராமன், சசிகுமார் ராஜி ஆகியோர் மீதும் புகார் அளித்துள்னர். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.