ADDED : டிச 09, 2024 06:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்டமங்கலம் : கண்டமஙகலம் ஒன்றியத்தில் புயல், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஒன்றிய செயலாளர் ராமதாஸ் தலைமை தாங்கி மழையால் பாதித்த குடும்பங்களுக்கு தலா 25 கிலோ அரிசி, காய்கறி, புடவை மற்றும் போர்வை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத்தலைவர் ஏழுமலை, பாக்கம் ஊராட்சி தலைவர் கல்யாணி வேலு, ராமமூர்த்தி, ஒன்றிய அணி செயலாளர்கள் குமரேசன், சேதுபதி, சண்முகம், அய்யனார், சுமன்,, கிளை செயலாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.