/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அ.தி.மு.க., பிரமுகர் இல்லத் திருமண விழா
/
அ.தி.மு.க., பிரமுகர் இல்லத் திருமண விழா
ADDED : ஜூன் 16, 2024 06:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: கண்டமங்கலம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் ராமதாஸ் சகோதரர் செல்வம் - சுமதி இல்லத் திருமண விழா நடந்தது.
புதுச்சேரி சங்கமித்ரா கண்வென்ஷன் சென்டரில் நடந்த விழாவில், மணமக்கள் கிருஷ்ணி - அரவிந்த் ஆகியோரை, முன்னாள் அமைச்சர் சண்முகம் வாழ்த்தினார். எம்.எல்.ஏ.,க்கள் சக்கரபாணி, அர்ஜூனன், மாவட்ட கைத்தறி பிரிவு செயலாளர் கோபி என்கிற வேல்முருகன், ஒன்றிய விவசாய அணி செயலாளர் குமரேசன், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் சேதுபதி உட்பட அ.தி.மு.க., நிர்வாகிகள் பலர் மணமக்களை வாழ்த்தினர்.
கண்டமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் ராமதாஸ், அவரின் சகோதரர் செல்வம் - சுமதி ஆகியோர் வரவேற்றனர்.