/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மண் பரிசோதனை செய்ய விவசாயிகளுக்கு அறிவுரை
/
மண் பரிசோதனை செய்ய விவசாயிகளுக்கு அறிவுரை
ADDED : மே 11, 2024 05:02 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் மண் பரிசோதனை செய்து பயன்பெற வேண்டுமென வேளாண்மை இணை இயக்குனர் கணேசன் தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்தில் 2024-25ம் ஆண்டிற்கான தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் 139 கிராம ஊராட்சிகளில் மண் மாதிரிகள் சேகரிக்கும் முகாம் நடக்கிறது.
விவசாயிகள் இந்த முகாம்களில் பங்கேற்று தங்களின் சாகுபடி நிலத்தில் மண் மாதிரிகளை சேகரித்து மண் பரிசோதனை செய்ய, தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
மண் மாதிரிகளை சேகரித்து விழுப்புரம் மண் பரிசோதனை நிலையம், நடமாடும் மண் பரிசோதனை நிலையத்திற்கு அனுப்ப வேண்டும். பரிசோதனை ஆய்வு முடிவுகளை பெற்று, அதன் மூலம் சாகுபடிக்கு தேவையான உரங்களை தேவையான அளவு இடுவதன் மூலம் உர செலவை குறைத்து விவசாயிகள் பயன்பெறலாம்.
இது தொடர்பாக மேலும், விபரங்களுக்கு விவசாயிகள் தங்களின் பகுதியில் உள்ள உதவி வேளாண்மை அலுவலரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.