/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
புதிய வீடுகளுக்கு சுயசான்று செயல்முறை பெற அறிவுரை
/
புதிய வீடுகளுக்கு சுயசான்று செயல்முறை பெற அறிவுரை
ADDED : செப் 04, 2024 11:08 PM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக கட்டிய வீடுகளுக்கு சுய சான்றிதழ் பெறுவதற்கான செயல்முறை எளிதாக்கப்பட்டுள்ளதாக, கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் வரும் அக்., 1ம் தேதி முதல் புதிதாக கட்டியுள்ள வீடுகளுக்கு மனை வரன்முறை அனுமதி மற்றும் கட்டட வரைபட அனுமதி சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில்
நேரடியாக அனுமதி பெற்றிருந்தால் செல்லாது என அரசாணை வெளியிட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இந்த நடைமுறையை, கடந்த ஜூலை 22ம் தேதி முதல் உள்ளாட்சி அமைப்புகளில் புதிதாக கட்டியுள்ள வீடுகள் பின்பற்ற வேண்டும்.
பதிவு செய்த நிபுணரால் முறையாக கையெழுத்திட்ட கட்டட திட்டம், விண்ணப்பதாரருக்கு ஆதரவாக பதிவு செய்த விற்பனை பத்திரம், பட்டா, அங்கீகரிக்கப்பட்ட லேஅவுட் ஆவணம், தள புகைப்படம் ஆகிய ஆவணங்களை சமர்பித்து சுய சான்றிதழ் பெறுவதற்கான செயல்முறை எளிமையாக்கப்பட்டுள்ளதாக, கலெக்டர் தெரிவித்துள்ளார்.