/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வேளாண் இயந்திரங்கள் செயல்பாடு மாவட்ட அளவிலான முகாம்
/
வேளாண் இயந்திரங்கள் செயல்பாடு மாவட்ட அளவிலான முகாம்
வேளாண் இயந்திரங்கள் செயல்பாடு மாவட்ட அளவிலான முகாம்
வேளாண் இயந்திரங்கள் செயல்பாடு மாவட்ட அளவிலான முகாம்
ADDED : ஆக 31, 2024 03:15 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் வேளாண் துறை சார்பில், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் செயல்பாடு குறித்த மாவட்ட அளவிலான முகாம்நடந்தது.
விழுப்புரம் பெருந்திட்ட வளாக மைதானத்தில், வேளாண் பொறியியல் துறை சார்பில் நடந்த முகாமை கலெக்டர் பழனி துவக்கி வைத்து பார்வையிட்டார்.
உழவர்கள், வேளாண் மாணவர்கள், உற்பத்தி குழு ஆர்வலர்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நிறுவனங்களின் உழுவைகள் மற்றும் துணைக் கருவிகளான ரோட்டவேட்டர், கலப்பைகள், பல்வகை தானியங்கள் அடிக்கும் கருவிகள், வைக்கோல் சுற்றும் கருவி, டிரோன், மாதிரி சோலார் பம்ப் செட், மாதிரி சோலார் உலர்ப்பான், தெளிப்பான், மதிப்பு கூட்டு இயந்திரங்கள் ஆகியவற்றின் பராமரிப்பு குறித்த பணிகளின் செயல் விளக்கம் காண்பிக்கப்பட்டது.
வேளாண் துறையின் கரும்பு அறுவடை இயந்திரம், வைக்கோல் கூட்டும் கருவி, தென்னை மட்டை துகளாக்கும் கருவி, விதை விதைக்கும் கருவிகளின் செயல் விளக்கம் மற்றும் அக்கருவிகளுக்கான அரசின் வாடகை விபரங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் சுமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.