/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அ.தி.மு.க., பூத் கமிட்டி ஆய்வுக்கூட்டம்
/
அ.தி.மு.க., பூத் கமிட்டி ஆய்வுக்கூட்டம்
ADDED : மார் 09, 2025 04:10 AM

வானுார், : வானுார் ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் ராவுத்தன்குப்பம் கிராமத்தில் பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.
ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், மாவட்ட கலைப்பிரிவு செயலாளர் முருகன், ஜெ., பேரவை செயலாளர் ஜெயப்பிரகாஷ் முன்னிலை வகித்தனர். முகாமில் எம்.எல்.ஏ., சக்கரபாணி, பூத் கமிட்டி பொறுப்பாளர் பாலமுருகன் ஆகியோர் ஆலோசனை வழங்கி, பூத் கமிட்டியை ஆய்வு செய்து, பொறுப்பாளர்களிடம் புத்தகங்களை வழங்கினர்.
நிகழ்ச்சியில், ஒன்றிய எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் குணசேகரன், இலக்கிய அணி செயலாளர் ஆறுமுகம், வர்த்தக அணி செயலாளர் ரவி, மாவட்ட இலக்கிய அணி துணைச் செயலாளர் முருகன், ஐ.டி., பிரிவு செயலாளர் ஜெகன்நாதன், ஒன்றிய கவுன்சிலர் பிரகாஷ், மாவட்ட பாசறை துணைச் செயலாளர் வினோத், சதீஷ், கிளை செயலாளர்கள் ஜானகிராமன், மகாதேவன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

