ADDED : செப் 01, 2024 04:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார், : திருவண்ணாமலை மாவட்டம், சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சையதுபஷி மனைவி ஆரிபாயி, 48; மனநலம் பாதிக்கப்பட்டவர்.
இவர், சில ஆண்டுகளாக திருவெண்ணெய்நல்லுார் அருகே உள்ள டி.எடப்பாளையம் கிராமத்தில் உள்ள அவரது தம்பி அஸ்கர் அலி வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.
வீட்டிலிருந்த ஆரிபாயியை நேற்று முன்தினம் முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அஸ்கர் அலி கொடுத்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.