
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் 100வது அன்னதானம் நிகழ்ச்சி நடந்தது.
சங்க தலைவர் கன்யா ரமேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் அன்பழகன், பொருளாளர் சுரேஷ்குமரன், முன்னாள் தலைவர் மற்றும் சங்க பப்ளிக் இமேஜ் சேர்மன் சுந்தர் முன்னிலை வகித்தனர். சாசன தலைவர் சாமிக்கண்ணு, குணசேகரன் ஆகியோர் அன்னதானத்தை துவக்கி வைத்தனர்.
இதில், அறுசுவை உணவு பரிமாறியதில் 400க்கும் மேற்பட்டார் சாப்பிட்டனர். இதில், நிர்வாகிகள் ராமநாதன், புவனேஸ்வரி, பாலகுருநாதன் முன்னாள் துணை ஆளுநர்கள் சரவணகுமார், காங்கேயன், சுமதி, முன்னாள் தலைவர் நம்மாழ்வார், செல்வி உட்பட பலர் பங்கேற்றனர்.

