தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு


ADDED : மே 14, 2024 05:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 14, 2024 05:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விழுப்புரம்: காணை அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2003-04ம் ஆண்டு பயின்ற முன்னாள் ஆசிரியர்கள், மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட கல்வி அலுவலர் துரைபாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் மாணவர் மணிகண்டன் வரவேற்றார்.

தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். தொடர்ந்து, முன்னாள் மாணவர்கள் சார்பில், காணை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு 35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆம்ப்ளிபையர், ஸ்பீக்கர், மைக் மற்றும் சுத்திகரிப்பு குடிநீர் இயந்திரம் ஆகியவற்றை வழங்கினர்.

பின், முன்னாள் ஆசிரியர்களுக்கும், நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் மாணவர்களுக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், பங்கேற்ற முன்னாள் மாணவர்கள், தங்களின் பணி மற்றும் வாழ்க்கை நிலை பற்றியும், முன்னாள் ஆசிரியர்கள், தங்களிடம் பயின்ற மாணவர்களுக்கு வாழ்க்கை நெறிக்கான அறிவுரைகளையும் கூறினர்.

தலைமை ஆசிரியர் பெரியநாயகம், ஆசிரியர்கள் ஜெயலட்சுமி, ஜனார்த்தனன், ராமதிலகம், சாரங்கபாணி, சேதுராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us