ADDED : மே 21, 2024 05:37 AM

அ நிறம் | அளவு
விழுப்புரம்: விழுப்புரம் அருகே திருப்பச்சாவடிமேட்டில் உள்ள ஸ்ரீ வித்யோதயா கல்வியியல் கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது.
இந்த கல்லுாரியில் கடந்த 2015ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை பயின்ற ஆசிரிய மாணவர்கள் பங்கேற்று, தங்களின் கல்லுாரி கால நினைவுகள், தற்போதுள்ள தங்களின் பணி மற்றும் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
தொடர்ந்து, தங்களுக்கு நிர்வாகிகளை தேர்வு செய்து கொண்டனர். அதில், 5 பேர் நிர்வாகக்குழு உறுப்பினர் களாக தேர்வு செய்யப்பட்டனர்.
நிகழ்ச்சியில், ஒவ்வொரு ஆண்டும் இதே நிகழ்ச்சி தொடர வேண்டும் என முன்னாள் மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
