/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு மருத்துவக் கல்லூரியில் கண்தான விழிப்புணர்வு பேரணி
/
அரசு மருத்துவக் கல்லூரியில் கண்தான விழிப்புணர்வு பேரணி
அரசு மருத்துவக் கல்லூரியில் கண்தான விழிப்புணர்வு பேரணி
அரசு மருத்துவக் கல்லூரியில் கண்தான விழிப்புணர்வு பேரணி
ADDED : செப் 04, 2024 11:18 PM

விக்கிரவாண்டி:விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கண் தானம் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
முண்டியபாக்கம் மருத்துவ கல்லூரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி டீன் ரமாதேவி தலைமை தாங்கி கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். பேரணியில் கண் தானம் குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு செய்தனர்.
மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க தலைவர் ரவிச்சந்திரன், மருத்துவ கண்காணிப்பாளர் தரணிதரன், துணை முதல்வர் தரணி, ஆர்.எம்.ஓ., ரவிக்குமார் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் லதா, ஒருங்கிணைப்பாளர்கள் தரணி வேல் ,பாலன், டாக்டர்கள் ஹேனா ரத்ன பிரியா, அனுராதா மற்றும் அனைத்து துறை பேராசிரியர்கள்,டாக்டர்கள்,மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.